மீளும் நினைவுகளுக்குள்
மனதின் நினைவுகள்
மகிழ்ச்சியை மறந்த காலமாய்
போர் தின்று போட்ட எச்சங்கள்
மிச்சங்கள் எதுகுமின்றி போக
கனவு சுமந்த தேசமொன்று
கனக்கும் இதயத்தோடு
அசைபோடுகிறது…
விடுதலை தொலைத்த மக்கள்
வீதியில் நின்றிருக்க இன்றும்
கதிரைகளுக்கான போட்டி
அப்புமார் சிலர் தள்ளாத வயதில்
பொல்லுன்றும் நேரத்தில் பேசுவர்
சாணக்கியம் சத்தியம்
காலக் கடத்தலில் சாணக்கியர்
கண்ணில் வையார் மக்கள் குறை
நேற்றை மறந்த நினைவுகளால்
இன்று சலித்து போகிறது கனவு
ஈழம் அனதையாய் கிடக்கிறது
குற்றுயிராய் சில முனுகல்கள்
குதர்கமாய் பல பேச்சுக்கள்
விடயங்கள் அற்ற கூட்டங்கள்
மனங்களை வெல்ல போராட்டங்கள்
புலமும் நிலமும் புதிரான - புதிய
தலைமைகளால் நிறைந்திட
புரிந்தும் புரியமால்
புளுங்கும் உள்ளத்தில் குரல்
அமைதியாகிறது…!